எல்ல விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்! ஒருவர் மாயம்
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
எல்ல-வெல்லவாய வீதியில் இரவு 9 மணிக்கு பிறகு இந்த கோர விபத்து சம்பவித்தது.
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்
இதன்போது, 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18 பேர் வரையில் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தங்காலை மாநகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட நகரசபையின் 12 ஊழியர்கள் இதில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள், இரண்டு சிறு குழந்தைகளும் மற்றும் பேருந்து சாரதியும் உள்ளடங்குகின்றனர்.
விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களை மீட்க பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
காணொளி - திருமால்


தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



