எல்ல-வெல்லவாய விபத்து தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள தகவல்
எல்ல-வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த எவரும் உயிர் இழக்கவில்லை என எல்ல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தங்காலை நகரசபை
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலாப் பயணமாக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.
நேற்று இரவு 9.20 மணியளவில் எல்ல-வெல்லவாய பகுதியில் வைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



