யாழில் உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியவருக்கு எதிராக தண்டப்பணம் அறவீடு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட யோக்கட்டுகளையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
யோக்கட்டுகளை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18 செல்சியஸ் வெப்ப நிலையில் கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு சென்ற வாகன சாரதிக்கு எதிராக அராலி பொது சுகாதார பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து சாரதியை கடுமையாக எச்சரித்த மன்று, 30 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிட்டதுடன், கைப்பற்றப்பட்ட யோக்கட் கப்கள் அடங்கிய 200 பக்கெட்டுகளையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
