திடீரென வயிற்றில் வெடித்து சிதறிய போதைப்பொருள்! ஒருவர் பலி - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டடிருந்த 'ஐஸ்' போதைப்பொருள் பைக்கட்டுகள் திடீரென வெடித்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியின் தங்காலை - மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்து ஒன்றில் பணியாற்றிய 55 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிஐடியில் திடீரென மனம் மாறிய சுரேஷ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
திடீரென நோய்வாய்ப்பட்ட சாரதி
கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச்சென்ற பேருந்து, நிறுத்துமிடத்தினை அடைந்த பின்னர் தங்காலையில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சென்று திரும்பிய சில நிமிடங்களிலேயே சாரதி திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, நேற்று (9) தங்காலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து 20 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பைக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் ஒன்று வயிற்றினுள்ளேயே வெடித்து இரத்தத்துடன் கலந்து விஷமாகியமையே மரணத்திற்கு காரணம் என மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam