வெள்ளவத்தையில் வீடொன்றில் ஏற்பட்ட மோதல் - ஒருவர் அடித்து கொலை
வெள்ளவத்தையில் இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவர் தடியால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (09) வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பிரடெரிக் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு - சுரேஷ் சலே தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பொலிஸார் விசாரணை
இதன்போது தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரே வீட்டில் வசித்து வந்த நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிஐடியில் திடீரென மனம் மாறிய சுரேஷ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
YOU MAY LIKE THIS VIDEO
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri