ஆச்சரியக்குறியாக மாறிய முதல்வர் விஜய்! இலங்கையில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு
இந்தியாவின் தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், அங்குள்ள பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
இலங்கையில் சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியான முதலீடுகளை மேற்கொள்ள தென்னிந்திய முதலீட்டாளர் குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி ஜி.கணேஷநாதனின் முயற்சியால் தென்னிந்தியாவை சேர்ந்த தூதுக்குழு இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது.
இலங்கையில் முதலீடு
இந்தக் குழுவினர் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தென்னிந்திய தூதுக்குழுவினர், அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரட்ன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான முதலீட்டு ஒத்துழைப்புக்கான வழிவகைகளை ஆராய்தல், வர்த்தக முதலீட்டு சூழல் பற்றி புரிந்துணர்வை ஏற்படுத்தல், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை கண்டறிதல் போன்றவை பற்றி பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் பல தசாப்தங்களின் பின்னர் திராவிட கட்சிகளை தோற்கடித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இந்த முதலீட்டு வாய்ப்புகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26