முல்லைத்தீவில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் கடத்துவதற்கு தயாராக இருந்த தேக்குமரக்குற்றிகளையும் வாகன சாரதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப்பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறவுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மரக்கடத்தல்
இந்தநிலையில், இன்று அதிகாலை புதுக்குடியிருப்பு நோக்கி கொண்டு செல்ல தயாராக இருந்த நிலையில் 11 தேக்கு மரக்குற்றிகள் பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டு குறித்த மரக்கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதுடைய வசந்தபுரம்- மன்னாகண்டலை சேர்ந்த சாரதி ஒருவர் கப்ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/d9bb3789-d9ec-49a5-a1ce-0776fecaba1a/25-67a9db1393ee5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/80f8b517-44f9-4f22-88f1-8659721d8ebd/25-67a9db1430e94.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8e547b4c-4dff-4ab9-a764-12ef29b6441d/25-67a9db14b4007.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)