சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய வாகன சாரதி கைது
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பளை பகுதியில் இருந்து தென்னம் மட்டைகளை ஏற்றி செல்வது போன்று சூட்சுமமான முறையில் மணலை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார்.
சோதனை
இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (16.06.2026) குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தப்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.