வவுனியாவில் மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது
வவுனியா (Vavuniya), ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (29.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
வவுனியா தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேருந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri