சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்போது உள்ள யாப்பின் படி சத்தியலிங்கம் பொதுச்செயலாளர் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், துரைராசசிங்கம் பதவி விலகியதால் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமானது. யாப்பின் படி வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கமைய சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் இருக்கிறார். ஆனால் எவ்வாறான சந்தர்ப்பங்களில் பதில் பொதுச்செயலாளர் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன.
இந்த விடயங்கள் மத்திய செயற்குழுவில் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என கூறினார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam