மன்னார் பாடசாலையொன்றில் காதர் மஸ்தானினால் குடிநீர் விநியோகத் திட்டம் திறந்து வைப்பு
தேசிய நீர் தினத்தை முன்னிட்டு 'பசுமையான தேசம் சுபீட்சமான நாளை' எனும் தொனிப் பொருளில் மன்னார் கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(25.03.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
குடிநீர் விநியோகத் திட்டம்
இதன் போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மன்/கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகரினால் வழங்கப்பட்ட புத்தக பைகள் மடு வலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் 477 மாணவர்களுக்கான வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |