தென் சீனக்கடலில் மோதல் : சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் எடுத்த நடவடிக்கை
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தி 3 வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸிலிருந்து 105 கடல் மைல் தொலைவில் தென்சீனக் கடலில் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீது இந்த நீர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் பலத்த சேதம்
சீனக் கடலோரக் படையினரின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் தண்ணீர் தாக்குதலால் கப்பல் பலத்த சேதமடைந்ததாகவும், பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எடுவார்டோ அனோ தெரிவித்துள்ளார்.
சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை நடத்திய முக்கியஸ்தர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |