முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றவர்கள் மீது கார் ஒன்றில் வந்த நால்வர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (25.03.2024) இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம்
மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களை தடுக்க முயற்சித்த பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேற்கொண்டு இவ்வாறான குழுக்களின் செயற்பாட்டினை பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |