நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Jaffna Sri Lankan Peoples
By Sudaron Apr 18, 2026 07:57 AM GMT
Report

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் 2027ஆம் ஆண்டில் முழுமைபெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும், "இந்நிலையம் வடிவமைக்கப்பட்ட நாளாந்த கொள்ளளவை அடையாமல், தற்போது சுமார் 60 கன மீட்டர் (m³/day) அளவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!

அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!

இலக்கு நிர்ணயிப்பு 

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தொடர்ந்து, அவசரகாலப் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிப்படைச் செயல்பாடுகள் மீட்டெடுக்கப்பட்டு தற்போது நிலைப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்து வரும் நிலையில், விரைவில் நிலையம் முழுத் திறனுடன் இயங்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Drinking Water Supply Neduntheevu 2027 Permanent

இதற்கிடையில், நெடுந்தீவின் நீண்டகால குடிநீர் தேவைக்கான நிரந்தரத் தீர்வாக, 300 கன மீட்டர்/நாள் கொள்ளளவு கொண்ட புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான விரிவாக்கத் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் தொடங்கியுள்ளது.

திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து வடக்கு உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் குறிப்பிடுகையில் "விரிவான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், சாத்தியக்கூறு ஆய்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்பு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் நெடுந்தீவின் முழுக் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய நிலையத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது"

இந்த முன்னெடுப்பு, தற்காலிகப் பழுதுபார்ப்புகளில் இருந்து மாறி, நெடுந்தீவில் நிலையான மற்றும் நீண்டகால நீர் முகாமைத்துவ முறையை நோக்கிய முக்கியமான மாற்றமாக அமையும் என” நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய போர் வீரர்.. இலங்கை அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை!

இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய போர் வீரர்.. இலங்கை அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை!

மன்னாரில் காணாமல் போனதாக தேடப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்

மன்னாரில் காணாமல் போனதாக தேடப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US