இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய போர் வீரர்.. இலங்கை அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை!

United States of America Sri Lanka Government Israel Gaza
By Sajithra Apr 18, 2026 06:04 AM GMT
Report

காஸாவில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதாக கூறப்படும் இஸ்ரேலிய-அமெரிக்க போர் வீரர் ஒருவர் இலங்கையில் மறைந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

ஜேக் பர்கோன்ஸ் (Jake Burkons) என்ற குறித்த போர் வீரருக்கு எதிராக ஹிந்த் ரஜப் (HRF) அமைப்பு இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.

(ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (Hind Rajab Foundation - HRF) என்பது காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி ஹிந்த் ரஜப் என்பவரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பாகும்.)

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் (டெக்சாஸ்) இரட்டை குடியுரிமை கொண்ட குறித்த போர் வீரர், இஸ்ரேலிய இராணுவத்தின் 7ஆவது கவசப் பிரிவின் 603ஆவது போர் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றியவர்.

அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!

அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!

போர் பொறியியல் படைப்பிரிவு 

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து அவர் தன்னார்வத்துடன் இராணுவத்தில் இணைந்து காஸாவில் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய போர் வீரர்.. இலங்கை அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை! | Israeli American Soldier War Crimes In Sri Lanka

அவர் அங்கம் வகித்த 603ஆவது படைப்பிரிவானது, காஸாவில் குடியிருப்புப் பகுதிகள், மசூதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் திட்டமிட்டுத் தகர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிந்த் ரஜப் அறக்கட்டளை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், 2023 ஒக்டோபர் முதல் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் 65க்கும் மேற்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை இந்தப் படைப்பிரிவு மேற்கொண்டுள்ளதாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் சிவில் கட்டடங்களை வெடிபொருட்கள் மூலம் தகர்த்தும் நடவடிக்கைகளில் ஜேக் பர்கோன்ஸ் நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தஞ்சம்..  

அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், சிவில் கட்டடங்களுக்குள் வெடிமருந்து கம்பிகளை வைத்திருப்பதும், கட்டடங்கள் தகர்க்கப்படுவதும் பதிவாகியுள்ளன.

இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் அமெரிக்க - இஸ்ரேலிய போர் வீரர்.. இலங்கை அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை! | Israeli American Soldier War Crimes In Sri Lanka

இத்தகைய நடவடிக்கைகள் போர்க்குற்றங்களின் கீழ் வருவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஜேக் பர்கோன்ஸ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கையில் தங்கியிருப்பதை ஹிந்த் ரஜப் அறக்கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் தமது நாட்டில் இருக்கும் பட்சத்தில், அவர்களை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்த் ரஜப் அறக்கட்டளை தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு அமெரிக்க விடுத்த பகிரங்க எச்சரிக்கை

ஈரானுக்கு அமெரிக்க விடுத்த பகிரங்க எச்சரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US