ஈரானுக்கு அமெரிக்க விடுத்த பகிரங்க எச்சரிக்கை
ஈரானிய துறைமுகங்களில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், ஈரானின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கக் கடற்படை முற்றுகை
ஈரானின் கடல்வழி வர்த்தகம் மற்றும் இராணுவக் கப்பல்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The U.S. naval blockade continues... pic.twitter.com/EBvglrf6FA
— U.S. Central Command (@CENTCOM) April 17, 2026
இதேவேளை அமெரிக்கக் கடற்படை முற்றுகை தொடர்வதை போர் நிறுத்த மீறலாக ஈரான் கருதுகிறது என்றும், முற்றுகை நீக்கப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடும் என்றும், உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவிற்கு நெருக்கமான, தகவலறிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஐ.ஆர்.ஜி.சி-யுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.