போரதீவுப்பற்று பிரதேசத்தில் நாளென்றுக்கு 22000 லீற்றர் குடிநீர் வவுசர்கள் மூலம் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்தில் நாளென்றுக்கு 22000 லீற்றர் குடிநீர் வவுசர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதே சபையின் தவிசாளர் விமநலாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதற்கும் மேலாக இக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மரண வீடுகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கும், நாம் வுவுசர் மூலம் குடிநீரை வழங்கி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனது பிரதேச சபை மிகவும் வருமானம் குறைந்த சபையாக இருக்கின்ற போதிலும் நாம் மாதாந்தம் இரண்டு இலட்சத்து 32,000 மேற்பட்ட நிதியை மாதாந்தம் செலவு செய்து வருகின்றோம்.
வறட்சி நிலமை
மட்டக்களப்பு மாவட்டம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலமை காரணமாக எமது பிரதேச சபையினால் நீர்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பல கிராமங்களில் சுத்தமான குடிநீரின்றி அங்குள்ள மக்கள் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எங்களுடைய போரதீவுப் பற்று பிரதேச சபையினால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 9 கிராமங்களுக்கு நாம் வவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றோம்.
நீர் விநியோகம்
மக்களின் நீர் தேவைகளை முற்றாக நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து இருக்கின்றோம்.
எனினும் நாம் தற்போது நாள் ஒன்றுக்கு 22,000 லீற்றர் குடிநீரை நாம் வவுசர்கள் மூலம் பிரதேசத்திற்கு வழங்கி வருகின்றோம்.
அதுபோன்று பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மரண வீடுகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கும், நாம் வவுசர் மூலம் நீரை வருகின்றோம்.
எமது பிரதேச சபை மிகவும் வருமானம் குறைந்த சபையாக இருக்கின்ற போதிலும் நாம் மாதாந்தம் இரண்டு இலட்சத்து 32,000 மேற்பட்ட நிதியை நாம் செலவு செய்து வருகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.



