யாழில் குடிநீர் இல்லை! மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்
யாழ். மாவட்டத்தில் சுமார் 69 ஆயிரத்து 113 பேருக்கு குடிநீர் இல்லாமல் அல்லல்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 21 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் குடிதண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர்.
நிலமை மேலும் மோசமாகும்
குறித்த பிரதேச செயலர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் மழை பெய்யாவிடின் நிலமை மேலும் மோசமாகும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
