ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என ஜனாதபிதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 'அப்பாச்சி' ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதை சுட்டிக்காட்டி, இந்த அதிரடி முடிவை அவர் அறிவித்தார்.

நாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம், அதுவும் மிகக் கடுமையான தாக்குதலாக இருக்கும்" என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்த தமக்கு முழு உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஈரான் மீது அமெரிக்கா பலத்த தாக்குதலை நடத்தியுள்ளதை உறுதிப்படுத்திய டிரம்ப், இன்றும் அதே போன்ற கடுமையான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் கடந்த சில மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இது ஒரு நல்ல ஒப்பந்தம். ஆனால் அவர்கள் காலம் கடத்தி வருகிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் கோபமடைந்துள்ள டிரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதையும் நிராகரிக்க மறுத்துவிட்டார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan