குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேற்றம்: கண்டுகொள்ளாத மக்கள்
திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் பிரதான வீதியில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாகக் குடிநீர் விரயமாகிச் செல்கின்றது.
கந்தளாய் பிரதேசத்தில் பிராந்திய குடிநீர் சுத்திகரிக்கும் அலுவலகம் காணப்படுகின்றது.
கந்தளாய் குழாய் நீர் பிராந்திய அலுவலகத்தில் சேவையாற்றும் பல்வேறு அதிகாரிகள் கந்தளாய் பிரதான வீதியில் விரயமாகி ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரினை கண்டும் காணாதது போல் செல்கின்றனர்.
இவ்வாறு விரயமாகிச் செல்லும் குடிநீர் வீதியின் நெடுகிலும் ஓடிச் செல்வதால் பிரதான வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இவ்வாறு குடிநீர் விரயமாவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.









