அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிரடி திருப்பம் - செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி
அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்று காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, செனட்டில் ஜனநாயகக் கட்சி 54 இடங்களையும், குடியரசுக் கட்சி 44 இடங்களையும் பெற்றுள்ள பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 237 இடங்களையும், குடியரசுக் கட்சி 147 இடங்களையும் பெற்றுள்ளன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026
டெக்சாஸ், ஓஹியோ, கன்சாஸ் போன்ற குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, கன்சாஸ் மாநிலத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி செனட் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எஞ்சிய பதவிக்காலத்தில் அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டமூலங்கள், வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் அரசியல் கொள்கைகள் தொடர்பான முடிவுகளில் ஜனநாயகக் கட்சிக்கு அதிக செல்வாக்கு கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.