என்னை மோசமானவர் என கூறிய மகிந்த! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்..
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், தமிழ் கைதிகளின் கோரிக்கையை ஏற்று, விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கச் சென்றபோது தான் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதல் மிகவும் திட்டமிட்டுக் கொலை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
தான் எப்போதுமே தமிழ் மக்களின் நலன்களையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகவும், அதிகாரத்தில் இருப்பது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவிர சுயநலத்திற்காக அல்ல. சிறைச்சாலைக்குள் சிறிய கற்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தக் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறைச்சாலை நிர்வாகத்தின் சில அதிகாரிகளின் பங்கு இருந்திருக்கலாம் என்றும், தன்னை உள்ளே வைத்து மரணமடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan