ஜனாதிபதியை சந்தித்தது குறித்து மனம் திறந்த டக்ளஸ்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொரடர்பில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் உரையாற்றியுள்ளார்.
அவர் கூறுகையில், ”13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதை இலக்கே எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது.
குறிப்பாக 13ஆம் திருத்தத்தினை மூன்று கட்டங்களாக நடைமுறைபடுத்துவதன் ஊடாக முழுமையாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.
அதில் முதலாவது கட்டமாக, நிறைவேற்று செயற்பாடுகள் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஊடாகவும் மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை மீளக் கையளிப்பது. இதனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,