வழங்கப்படும் பயன்கள் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும்: டக்ளஸ் சுட்டிக்காட்டு
அனைத்தும் மக்களுக்கும் வழங்கப்படும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் செயற்படுகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகள் தொடரில் ஆராயும் முன்னாயத்தக் கூட்டம் நேற்றைய தினம் (23.03.2024) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி விசேட நிதி
அமைச்சர் மேலும் கூறுகையில்,
“மக்களுக்காக கிடைக்கின்ற நிதிகளை திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெறுகின்றது.
இதேவேளை, அரச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட நிதி ஒன்றை வழங்க முன்வந்துள்ளார்.

அந்த வகையில் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கானதாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இது திணிப்போ அல்லது அரசியல் நோக்குடையதோ என்று எண்ணவேண்டாம்.
நான் என்றும் சுயநலத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. மாறாக அரசியல் இலாபத்துக்காக செயற்றிட்டங்களையும் முன்னெடுப்பதையும் விரும்புவதில்லை.
அனைத்தும் மக்களுக்கும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் இவற்றை பார்க்கப்பட வேண்டும்.

கடந்த 3 வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அது 320 மில்லியனாக எமது மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.
அந்தவகையில் கிடைத்துள்ள இந்த நிதியூடாக மக்களுக்கு உச்சபட்சமான பலனை கிடைக்க செய்வதே எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் ”என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரச அதிபர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலர்கள் பிரதேச சபைகளின் செயலாளர்கள் துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri