நுவரெலியாவில் சுற்றுலா வழிகாட்டியொருவர் போதைப்பொருளுடன் கைது
நுவரெலியா - நானுஓயா பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயண வழிகாட்டியொருவர் ஹாஷ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் நானுஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை (23.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 31 வயதுடைய சிலாபம் - ஹலவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பொதியொன்றுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவரிடமிருந்து 1.030 மில்லிகிராம் ஹாஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபருக்கு போதைப் பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் அவரது விநியோக வலையமைப்பு குறித்து நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
