தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை : டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
தேசிய நல்லிணக்கமே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள சாத்தியமான வழிமுறை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், " 90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.
யாழ் பல்கலைக் கழகம்
இதன்மூலம் பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. குறிப்பாக, அறிவியல் நகரை விடுவித்து, பொறியியல் பீடத்தினை அங்கு உருவாக்குவதற்கு தேசிய நல்லிணக்கமே காரணமாக அமைந்திருந்தது.
அதேபோன்று, எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கும்.
இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு யாழ் பல்கலைக் கழகத்தின் தேசிய ஊழியர் சங்கத்தினராகிய நீங்களும் உங்களுடைய முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |