தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் இவர்களே! பகிரங்கமாக கூறிய அமைச்சர் டக்ளஸ் (Photos)
தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர்களாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இரண்டாவது எம்.எச்.எம்.அஷ்ரப், மூன்றாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே உள்ளதாக கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர்களாக கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை - ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்கள் சேவை
மேலும் தெரிவிக்கையில், மக்கள் சேவை கொண்டதாகவே எனது கடமை இருக்குமே தவிர எவ்வித சுயலாபமும் இருக்காது. ஆகவே பலரும் பலதை கதைக்கலாம். எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை.

இவர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். வடக்கு, கிழக்கு உட்பட மலையகத்திலும் 3 தேசிய தலைவர்கள் இருந்தனர். இது நான் சொல்கின்ற தேசிய தலைவர்கள்.
வேறு நபர்கள் வேற விதமாக கூறலாம். தே என்ற சொல்லுக்கு ஒற்றை கொம்பினை மாற்றி (தெ) என்ற தலைவர் வேறு என்பதாகும். தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இரண்டாவது எம்.எச்.எம்.அஷ்ரப். மூன்றாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே உள்ளனர்.
ஒலுவில் துறைமுகம்
இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவராக கருதுகின்றேன். ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.













தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam