பேசாலை பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா களவிஜயம்
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசாலை பகுதிக்கு களவிஜயம் செய்துள்ளார்.
குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்து ஐஸ் தொழிற்சாலை மற்றும் கடற்றொழில் கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் கடற்கரை பகுதியையும் பார்வையிடடுள்ளார்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை கிராமத்தில் மிக நீண்ட காலமாக பழமை வாய்ந்த ஐஸ் தொழிற்சாலை கிராமத்தின் பிரதான பகுதியில் பாழடைந்த நிலையில் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.
முறை கேடான செயல்கள்
குறித்த ஐஸ் தொழிற்சாலை வளாகத்தில் முறை கேடான செயல்கள் இடம்பெற்று வருகின்றமை குறித்து மக்களினால் முறைப்பாடுகளும் முன் வைக்கப்பட்டு வந்தது.
குறித்த ஐஸ் தொழிற்சாலை மிக நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்துள்ளார்கள்.
பேசாலை கிராமத்தில் தபால் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகிறது.பஸ் தரிப்பு நிலையம் பிரதான வீதியிலேயே பேருந்து தரித்து இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வந்த நிலையிலும்,சந்தை கட்டிடத் தொகுதி இல்லாமல் கிராமத்தின் தொடருந்து வீதியில் குறித்த நாட்களில் வியாபார நடவடிக்கை காணப்பட்டு வருகிறது.
மேலும் ஆயுர்வேத வைத்திய நிலையம் வசதி குறைந்த ஒரு சிறிய மண்டபத்தில் இடம்பெற்று வந்தது.
இந் நிலையை கருத்தில் கொண்டு குறித்த கிராம மக்கள் பழைய ஐஸ் தொழிற்சாலை மற்றும் அதனோடு கூடிய இடம் குறித்த திட்டங்களுக்கு வசதியாக காணப்படும் நிலையில் அபிவிருத்தியை நோக்கியாக குறித்த கிராம மக்கள், கடல் தொழில் அமைச்சுக்கு கீழ் உள்ள குறித்த இடத்தை கோரிக்கையாக குறித்த திட்டங்களுக்கு தந்து உதவுமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கஇந் நிலையில் தமது தேவைகளை வலியுறுத்தி பேசாலை கிராமத்தின் கடற்றொழில் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ,பொதுமக்கள் ஒன்று கூடி பேசாலை கிராமத்தின் உதவி பங்கு தந்தையின் தலைமையில் அமைச்சரை ஐஸ் தொழிற்சாலை பகுதியில் வரவேற்று குறித்த இடத்தை அமைச்சரும் மக்களும் பார்வையிட்டு தமக்கான நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் முன்வைத்ததுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |