டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட சகல ஆயுதங்களும் மாயம்
டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட எந்தவொரு ஆயுதமும் அவரிடம் இல்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மினுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2000ஆம் ஆண்டளவில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கென T 56 ரக துப்பாக்கிகள், 06 கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், T 56 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் 1560 மற்றும் கைத்துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 100ம் அவற்றோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் எதுவும் அவர் வசம் இல்லை என்றும் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri