திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இது தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சரின் நடவடிக்கை
கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பத்திரிகை செய்தி மூலம் அறிந்திருந்தாகவும், அது தொடர்பாக நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மதவிவகாரங்களுக்கு பொறுப்பான
அமைச்சருடன் இணைந்து திருகோணமலைக்கான களவிஜயத்தினை மேற்கொண்டு நிலமைகளை
நேரடியாக ஆராய்வதுடன்,ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, இந்துக்களின்
உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.



