கனேடிய தமிழர் பேரவை நடாத்திய ஊடக சந்திப்பில் புலம்பெயர் தமிழர்களிடையே அமளிதுமளி
கனேடிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் புலம்பெயர் தமிழர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தமிழர் தெரு விழா கனடாவில் இடம்பெறவுள்ளது.
தமிழர் தெரு விழா
கனடாவில் ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடந்து வரும் தமிழர் தெருவிழா இந்த ஆண்டு 11 ஆவது ஆண்டு நிகழ்வாக எதிர்வரும் ஓகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இவ்விழா தொடர்பிலான ஊடக சந்திப்பின் போதே கனேடிய தமிழர் பேரவை உறுப்பினர்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு வருவதுடன் கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறித்த காணொளியில் ஊடக சந்திப்பின்போது, ஒரு உறுப்பினருக்கு ஒரு மணிநேரம் மாத்திரமே வழங்கப்பட்டமை குறித்து இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



