திருக்கோணேஸ்வர ஆலயத்தின் காணி அபகரிப்பு நடவடிக்கை ஓர் அபாய எச்சரிக்கை: ந.ஸ்ரீகாந்தா

Sri Lankan Tamils Trincomalee
By Kajinthan Sep 10, 2022 07:59 PM GMT
Report

வரலாற்றுத் தொன்மை மிகு திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சுற்றாடலில் உள்ள அதன் காணிகளை ஆக்கிரமித்து கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை பற்றிய செய்திகள் அபாய அறிவிப்பாக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும்,சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் நேற்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சுற்றாடல்

“தமிழர் தாயகத்தின் தலைநகர் என்று உணர்வு பூர்வமாக கருதப்பட்டு வந்திருக்கும் திருகோணமலையில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மை மிகு திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சுற்றாடலில் உள்ள அதன் காணிகளை ஆக்கிரமித்து கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை பற்றிய செய்திகள் அபாய அறிவிப்பாக அமைந்துள்ளன.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் காணி அபகரிப்பு நடவடிக்கை ஓர்  அபாய எச்சரிக்கை: ந.ஸ்ரீகாந்தா | Sri Thirukoneswaram Kovil Land Problem

சுதந்திர இலங்கையில் கடந்த 74 ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் அங்குள்ள சிங்கள மக்களின் தொகை மூன்று மடங்காக பெருகியுள்ளது.

1960ல் அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள குடியேற்ற வாசிகளுக்கென அம்பாறைத் தொகுதியை உருவாக்கி, அதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், 1977ல் திருகோணமலையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கினை வளைத்துப் போட்டு சேருவில தொகுதி அமைக்கப்பட்டதால் இரண்டு மடங்கு ஆகியது.

1989ல் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ், கிழக்கில் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவம், அதற்குரிய விகிதாசாரத்திற்கு மேலதிகமாகவே தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், பூகோள – அரசியல் ரீதியாக, கேந்திர முக்கியத்துவம் கொண்ட திருகோணமலையை, கூடிய விரைவில் ஒட்டு மொத்தமாக, தனது பிடிக்குள் கொண்டு வரும் நோக்கில் சிங்களப் பேரினவாதம் குறிவைத்து செயற்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் போது ஏற்பட்ட இடப்பெயர்வினால் வெறிச்சோடிப் போன பழந் தமிழ்க கிராமங்களும், அவர்களின் வயல் நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் கையிலேயே பெருமளவில் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்நிலையில், தொல்பொருட் திணைக்களத்தின் ஊடாக இதுவரையில் எடுக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளில் இப்போது சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்துள்ளது.

இந்தக் கூட்டு முயற்சியே திருக்கோணேஸ்வர ஆலயக் காணிகளை அபகரிக்க முன்னெடுக்கப்படுகின்றது.

குரல் எழுப்புவதற்குக் கூட நாதியற்ற நிலை

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் காணி அபகரிப்பு நடவடிக்கை ஓர்  அபாய எச்சரிக்கை: ந.ஸ்ரீகாந்தா | Sri Thirukoneswaram Kovil Land Problem

இதற்கு எதிராக, உரிய நேரத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குரல் எழுப்புவதற்குக் கூட நாதியற்ற நிலையே அந்த மாவட்டத் தமிழ் மக்களின் தலைவிதியாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் ஒரே ஓரு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன், தனது தளர்வுற்ற உடல் நிலை காரணமாக களத்தில் நிற்க முடியாமல் உள்ளார்.

ஆனால், இந்தக் காரணத்திற்காக திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆகிவிட முடியாது.

அதே நேரத்தில், பல்வேறு அரசிற் காரணங்களுக்காக கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் நீடிக்க வேண்டிய அவசியத்தையும் மறுத்துரைக்க முடியாது.

எனவே, நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை பயன்படுத்தி இந்த இரண்டு தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

தமது மாவட்டத்தில் நிலைகொண்டு, உடனுக்குடன் செயற்படக் கூடிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு, கூட்டமைப்பிற்கு வாக்களித்து மயிரிழையில் அதன் வேட்பாளரை வெற்றி பெறச் செய்த திருகோணமலை மாவட்ட தமிழர்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை தமிழ்த் தேசியத்தின் பெயரால் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ள ஒருவருக்கு சம்பந்தன் வழி விடுவதன் மூலமும், அதே நேரத்தில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஊடாக அவர் நாடாளுமன்றத்துக்குள் மீள் பிரவேசம் செய்வதை, கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் முன் கூட்டியே உறுதிப்படுத்துவதன் மூலமும், இந்த விடயங்களை செயற்படுத்த முடியும்.

ஆயினும், அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தேசியப்பட்டியல் ஊடாக கிடைத்திருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போவது என்பது, நிச்சயமாக சலசலப்புக்களை ஏற்படுத்தவே செய்யும் என்றாலும், தமிழர் தாயகத்தின் கேந்திர பூமியான திருகோணமலை தொடர்ந்து எதிர்நோக்கி நிற்கும் ஈட்டி முனை ஊடுருவல்களை உற்று நோக்கும் எவருக்கும் நிலைமையை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமானது அல்ல.

திருகோணமலை காப்பாற்றப்பட வேண்டுமானால் விட்டக்கொடுப்புக்கள் தவிர்க்கப்பட முடியாதவை.

பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

இதே வேளையில் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கி.பி 1255ல் முழு இலங்கையையும் வெற்றி கொண்ட பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் திருக்கோணேஸ்வர குன்றின் பாறைகளில் பொறித்ததும், பின்னாட்களில் ஆங்கிலேயர் அமைத்த பிறடெறிக் கோட்டையின் முகப்பு வாசலை அலங்கரித்தவையுமான மீன் இலச்சினைகள் இரண்டும், ஒரு சில வருடங்களுக்கு முன்னர், அவற்றின் மேல் பூசப்பட்ட கறுப்பு வர்ணத்துக்குள் புதைக்கப்பட்டிருப்பதை திருகோணமலையில் வைத்து நாங்கள் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தும், அந்த விவகாரத்தை எமது மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதுவரை கையில் எடுக்கவில்லை என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறாமல் இருக்க முடியவில்லை.

தமிழர் வரலாற்றை இருட்டடிப்புச் செய்வதிலும், வாழ்விடத்தை பறித்தெடுப்பதிலும் பேரினவாதிகள் கூட்டாக செயற்படுவதை எங்களில் எவரும் கைகட்டிப் பாத்திருக்க முடியாது.

திருக்கோணேஸ்வர ஆலயப் பிரதேசம், ஓர் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என அறுபதுகளில் தமிழர் தரப்பில் ஒலித்த அதே கோரிக்கையை, மீண்டும் முன்வைப்பதற்குரிய நியாயமும், அவசியமும் முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது ஏற்பட்டிருக்கின்றன.

நல்லூரக் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்திருக்கலாம்.

நல்லூர் சந்நிதான மடாதிபதியை தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் தேடி வந்து சந்தித்திருக்கலாம்.

இவை எல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் உலக அரங்கில் தன் சொந்தத் தேவைகளுக்காக அரங்கேற்றும் அப்பட்டமான சித்து விளையாடல்கள் மட்டுமே, இவை அறிவுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு போதும் எடுபடாது.

மாறாக, பேரினவாதத்தின் இயல்பும் நோக்கமும் திருக்கோணேஸ்வர குன்று உட்பட தமிழினத்தின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளை அது தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருப்பதில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது” என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US