பிள்ளையான் டக்ளஸ் வரிசையில் அடுத்து கருணா..!
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த போது, அமைச்சரவை பாதுகாப்பு, தனிப்பாதுகாப்பு அவரோடு இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்.ஆனால் அதற்கு மேலதிகமாக கைத்துப்பாக்கிகளை ஏன் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவோடு இருந்த அத்தனை ஆயுதகுழுக்களை சார்ந்தவர்களையும் தற்போது அரசு சுற்றிவளைத்து கைது செய்கின்றது.
அதிலும் தமிழர் பிரதேசங்களில் அன்றைய காலகட்டத்தில் யார் முக்கியமாக இருந்தார்களோ அவர்களின் கைதுகள் தீவிரப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.
செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இரண்டு தடவை மேலாக வடக்கில் ஒரு கைது இடம்பெறும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம் என்பதையும் அறியதருகின்றோம்.
மேலும், பிள்ளையான்,டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து கருணாவும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு