நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிவர்! சீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதிக்கு எச்சரிக்கை!
நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்துவிடுவர் என்று சீனாவின் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஸி ஜிங் பிங்குக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே இந்த எச்சரிக்கையை சீன ஜனாதிபதி விடுத்துள்ளார்.
அமெரிக்க கொள்கையில் மாற்றங்கள் இல்லை
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்வான் சீனாவில் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாகவே சீனா கருதுகிறது.
எனினும் தாய்வான் தொடர்பில் அமெரிக்க கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாய்வான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் குழி பறிக்கும் ஒருதலைப்பட்ச முயற்சிகளை வோஷிங்டன் கடுமையாக எதிர்க்கிறது என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு தாய்வான் நன்றி
இந்த கலந்துரையாடலை அடுத்து, தாய்வான், அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்காவுடனான உறவை ஆழப்படுத்தவுள்ளதாகவும் தாய்வான் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியும் சீன ஜனாதிபதியுடன் நேரில் சந்திப்பதற்கான
சாத்தியகூறுகள் தொடர்பாக ஆராயப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.