இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு லசித் மாலிங்க வெளியிட்டுள்ள முக்கிய பதிவு
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரும் தற்போதைய அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான லசித் மாலிங்க விசேட முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டில் இலங்கை அணி முதன்முதலில் உலகக் கிண்ணமொன்றை வென்றதன் முதல் சுற்றில் வெளியேறியதுடன் நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் இறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
12 ஆண்டுகள்
எனது தாய் நாட்டு அணி மற்றுமொரு உலகக் கிண்ணத்தை வெல்லும் என நினைத்த அனைவரும் நீண்ட காலம் பொறுமையுடன் விளையாட்டையும் வீரர்களையும் நேசித்தனர்.

கவலையுடன் இலங்கை அணியை திட்டித் தீர்த்தேனும் பொறுமையாக இணைந்திருந்ததன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் 2014ம் ஆண்டில் உலகக் கிண்ணமொன்றை வென்றெடுக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மற்றுமொரு உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான சாத்தியங்கள் முற்றாக முடங்கிப் போகவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
இரண்டாவது தடவை உலகக் கிண்ணம் வென்றெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டு பலர் பொறுமையாக காத்திருப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தம்மைப் போலவே மற்றொரு உலகக் கிண்ணம் வென்றெடுக்கப்படும் வரையில் விளையாட்டை தொடர்ந்தும் நேசிப்பார்கள் எனவும், விளையாட்டை கைவிடுவது அல்லது விலகிச் செல்வது தீா்வாக அமையாது என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri