'அனே ப்ளீஸ்' என கெஞ்ச வேண்டாம்.. அநுரவுக்கு சஜித் அறிவுரை
நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை, 'அனே ப்ளீஸ்' (Ane Please) என கெஞ்சிக் கொண்டிருக்காமல், அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சஜித்தின் வலியுறுத்து
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச பதிலளிக்க எழுந்த தருணத்தில் ‘அனே ப்ளீஸ்’ என்று கூறியது தொடர்பாக அவர் இவ்வாறு விமர்சித்தார்.

இந்த சம்பவம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதாகவும் அவர் நினைவூட்டினார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.