கைவிலங்குடன் அமெரிக்க தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ
புதிய இணைப்பு
மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவின் பெருநகர தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் இராணுவ வாகனங்கள், DEA தலைமையகத்திலிருந்து வெளியேறி மன்ஹாட்டனின் வெஸ்ட்சைடு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் சென்று உலங்குவானூர்திக்கு திரும்பியுள்ளன.
பின்னர் வெனிசுலா ஜனாதிபதிய மதுரோவும் அவரது மனைவியும் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
🇺🇸🇻🇪⚡️ — President Nicolás Maduro and his wife are now leaving the DEA office in New York City and are believed to be en route to the Metropolitan Detention Center in Brooklyn. pic.twitter.com/ItLJMGWOHt
— Gabriela Iglesias🇺🇲 (@iglesias_gabby) January 4, 2026
அதியுயர் பாதுகாப்புடன் மூன்று உலங்குவானூர்திகள் ஹட்சன் ஆற்றின் வழியாக பயணித்து, நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் கடந்து சென்றுள்ளன.
அதனை தொடர்ந்து அவர்கள் தற்போது தரையிறங்கி, அமெரிக்க போதைப்பொருள் சட்ட நடைமுறை திணைக்களத்தின் வாகனங்களின் வரிசையில் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள குறிப்பிட்டுள்ளன.

மூன்றாம் இணைப்பு
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் விமானம் நியூயோர்க்கில் தரையிறங்கியது.
ட்ரம்பின் மகனான பெரோன் வில்லியம் ட்ரம்ப், பகிர்ந்துள்ள காணொளி பதிவில், "மதுரோவை ஏற்றிச் சென்ற விமானம் இப்போது நியூயார்க்கின் ஸ்டீவர்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அவருக்கு சிறையில் ஆயுள் தண்டனை. கொடுங்கோலரைப் பூட்டு. இது டொனால்ட் ஜே. ட்ரம்பின் வரலாற்று சாதனை. அமெரிக்கா மீண்டும் முன்னிலை வகிக்கிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
🚨 BREAKING: Nicolás Maduro and his wife just ARRIVED in New York the plane has landed at Stewart International AirportThe mountain of charges he faces means up to LIFE IN PRISONLock the tyrant upThis is a HISTORIC accomplishment by Donald J. TrumpAmerica leads again 🇺🇸🔥 pic.twitter.com/SjEHPO4NJ9
— ⁿᵉʷˢ Barron Trump 🇺🇸 (@BarronTNews_) January 3, 2026
இரண்டாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கையை புதிதாகப் பதவியேற்ற நியூயார்க் நகர மேயர் மம்தானி கண்டித்துள்ளார்.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டை ஒருதலைப்பட்சமாகத் தாக்குவது ஒரு போர்ச் செயல் மற்றும் கூட்டாட்சி மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுரோவை நியோர்க்கிற்கு அழைத்து சென்றமை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அங்குள்ள மக்களின் சீரான நிலையை குழப்பும் செயல் எனவும் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
ட்ரம்பின் படைகளால் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படத்தில், நிக்கோலஸ் மதுரோ, கைவிலங்கிடப்பட்டு கண்கள் கட்டப்பட்டு காவலில் இருப்பது காட்டப்படுகின்றது.
நீண்டகால முறுகல்
மேலும், ட்ரம்ப், நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க போர்க்கப்பலான USS இவோ ஜிமாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம், வெனிசுலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.
இதன்போது, அந்நாட்டின் ஜனாதிபதியும் அவரின் மனைவியும் அமெரிக்க படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
Donald J. Trump Truth Social 01.03.26 11:18 AM
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) January 3, 2026
🚨Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/2c9XiUZ3yh
பல நாட்களாக அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே முறுகல் நிலை ஏற்பட்டு வந்த நிலையில் நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் நிர்வாகம் பதவி விலகுமாறு வலியுறுத்தி வந்தது.
இருப்பினும், அதனை மறுத்து வந்த மதுரோ, எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையிலேயே ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam