ஏழு போர்களை நிறுத்தினேன்! ஐ.நா.வில் ட்ரம்ப் பெருமிதம்
வெறும் ஏழு மாத காலப்பகுதியில், நான் ஏழு முடிவற்ற போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 80ஆவது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA)உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
7 போர்கள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதில் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, மற்றும் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை அடங்கும்.
எந்த ஜனாதிபதியும், பிரதமரும், அல்லது வேறு எந்த நாடும் இதைப் போல் எதையும் செய்ததில்லை. நான் இதை வெறும் ஏழு மாதங்களில் செய்தேன்.
இது இதற்கு முன் நடந்ததில்லை. இதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நோபல் அமைதிப் பரிசு
ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் எனக்கு, உண்மையான பரிசு, முடிவில்லாத போர்களில் கொல்லப்படுவதற்கு பதிலாக தங்கள் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுடன் வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் தான்"என்று குறிப்பிட்டுள்ளார்.



