மலையக மக்களை தாழ்த்தி பேசாதீர்கள்: நெஞ்சை உருக்கும் தேரரின் உரை
மலையக மக்களைத் தாழ்த்தி பேசாதீர்கள். நீங்கள் பருகும் ஒவ்வொரு தேநீரிலும் மலையக மக்களின் உதிரமும், வியர்வையும் கலந்துள்ளது என தேரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் தொடர்பில் நபரொருவர் தவறான பதிவுகளை ஊடகத்தில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ளவர்கள் சோம்பேறிகள்.அதனால் தான் பாராத தேசத்தில் இருந்து மலையகத்திற்கு மக்களைக் கொண்டு வந்தனர்.
இலங்கைக்கு அதிகளவான டொலர்களைக் கொண்டு வருவதற்காக பாராத தேசத்தில் இருந்து மலையக மக்களை நாட்டிற்கு வரவழைத்தனர்.
பாரத தேசத்திலிருந்து இலங்கைக்கு தமிழர்கள் வருகை தந்த போது மலையகம் காடாக இருந்தது.அந்தக் காட்டை தமிழர்கள் அழித்து தோட்டம் ஆக்கினார்கள்.அதனால் தான் நாம் தோட்டக்காட்டான்கள். பெரும் மகிழ்ச்சி.
இலங்கைத் தாயகத்தின் முதுகெலும்பு மலையகம்.இது எல்லாம் உனக்கு புரியாது தம்பி.மலையக மக்கள் படும் கஷ்டம் உனக்கு தெரியுமா.அவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பயணிக்கின்றார்கள்.
தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளை படக்கூடாது என்று நினைத்து மலையக தாய்மார்கள் கடல் கடந்து போய் கஷ்டப்படுகின்றார்கள்.
மலையகத்தையும், வடக்கு, கிழக்கு மக்களையும் குறை சொல்லாதீர்கள்.மலையக மக்கள் வடக்கு, கிழக்கிற்கு வந்தால் என்ன மொழி மாறி விடும்.அவர்களும் தமிழர்கள் தான்.உச்சரிப்பில் மட்டுமே மாற்றம் உண்டு.
உன் மனம் நொந்தால் மன்னித்துவிடு சகோதரனே எனத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam