அரசு சுவீகரிக்கப் போகும் அறக்கட்டளை நிதியம்
அம்புலுவாவ அறக்கட்டளை நிதியத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சட்டத்திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
புத்தசாசன அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து அம்புலுவாவ அறக்கட்டளை நிதித்தை சுவீகரிப்பதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிதியத்தில் நடந்துள்ள மோசடிகள்
இது 2009 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க அம்புலுவாவ திசாநாயக்க முதியன்செலகே ஜயரத்ன மத மையம் மற்றும் பல்லுயிர் வளாக அறக்கட்டளை நிதிச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
அம்புலுவாவ காணி அறங்காவலரால் அறக்கட்டளை பத்திரம் மூலம் குறித்த நிதியத்துக்கு அதிகாரம் மாற்றப்பட்டுள்ளது.ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிறுவுனரால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களை கொண்ட குழுவால் அறக்கட்டளை நிதியம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாகம், நிலங்கள் ஒதுக்கப்பட்ட விதம் மற்றும் அம்புலுவாவவின் வளர்ச்சிக்கு அரசாங்க பணம் செலவிடப்பட்டமை போன்ற பல பிரச்சினைகள் இப்போது தெரிய வந்துள்ளது.மேலும் அண்மையில் அம்புலுவாவ மலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளயைதை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.