கைமாறும் மத்தளை விமான நிலையம்
மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை பொது-தனியார் கூட்டு (PPP) திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இந்த செயல்முறையின் மூலம் மத்தளை விமான நிலையம் எந்த வகையிலும் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மேற்கொள்ளப்படவுள்ள திட்டம்
இந்த திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும், விமான நிலையத்திற்கான ஆர்வ வெளிப்பாடுகளை (EOI) அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சரின் கூற்றுப்படி, மூன்று தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே மத்தளை விமான நிலையத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த திட்டம் விமான பராமரிப்பு, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது எள எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri