அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட பணிப்புரை
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்பட்டதும் நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளைத் திறக்குமாறு வரிசையில் காத்திருக்கும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரே பொறுப்பேற்க வேண்டும்
இந்நிலையில், நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை திறக்க பொலிஸார் தலையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் கண்காணிக்கப்பட்டது. எரிபொருள் தாங்கிகளை திறப்பது பொலிஸாரின் கடமையல்ல, அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளை திறக்க முடியும்.
பொலிஸார் தலையிட்டு, இவ்வாறு எரிபொருள் தொட்டிகளை திறக்க முயன்றால், நாசகாரர்களாலோ அல்லது விபத்தாலோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பந்தப்பட்ட பொலிஸாரே பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை திறக்குமாறு, பெட்ரோல் நிலையங்களில் பணியில் இருக்கும் காவலர்களையோ, மற்ற பொலிஸாரையே வற்புறுத்த வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.