எரிபொருளுக்காக காத்திருந்த முச்சக்கர வண்டி சாரதி விபத்தில் படுகாயம் (VIDEO)
கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காககாத்திருந்த முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளார்.
முச்சக்கர வண்டிக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வடமராட்சி ஆழியவளை பகுதியிலிருந்து இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த வேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா பயணிகளை கொண்டு சென்ற பேருந்து மோதியமையினாலேயே முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
எரிபொருள் வரிசையில் முச்சக்கர வண்டியை நிறுத்துவதற்கு முற்பட்ட வேளை அதிவேகமாக பயணித்த பேருந்து முச்சக்கர வண்டி மோதி தள்ளியுள்ளது.
முச்சக்கர வண்டி முழுமையாக சேதம்
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வடமராட்சி ஆழியவளைப் பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் என பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் மற்றும் பெட்ரோலைப் பெற்றுக்கொள்வதற்காக நேற்றிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதியும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த போது விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri