எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்களின் மோசமான செயற்பாடு!
எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வடிகானில் தள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையின் உக்கிரம் காரணமாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்னர் பல மணித்தியாலங்களாக காத்திருந்த மக்கள் தற்போது பல நாட்களாக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வடிகாணுக்குள் தள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள்
இந்த நிலையில், எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவரது மோட்டார் சைக்களில் அதே வரிசையில் காத்திருந்த மற்ற நபர்களால் வடிகாணுக்குள் தள்ளப்பட்ட சம்பவம் ஒன்று மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் சாரதி மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்து எரிபொருள் இல்லாததால் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படவே, வரிசையில் காத்திருந்த ஏனையோர் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை வடிகாணில் தள்ளிவிட்டு எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நபர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.