மக்களை அச்சுறுத்தி மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம்-சம்பிக்க ரணவக்க
மின்சார கட்டணம் சம்பந்தமாக மக்கள் பயமுறுத்தப்படுவதை தன்னால், ஏற்றுக்கொள்ள முடியாது என 43 வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மக்களை அச்சுறுத்துவது அநீதியானது
மின்சார கட்டணம் சம்பந்தமாக பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மின்சார கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கவில்லை என்றால், மின்சாரத்தை துண்டிப்போம் என்று கூறும் கதை அநீதியானது.
இப்படி அச்சுறுத்தப்படுவது முற்றாக நாட்டு மக்களை கைது செய்வது போன்ற விடயம். மக்களை பயமுறுத்தி மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம்.
நிலக்கரி கொள்வனவின் போது கொள்முதல் தவறுகள் மற்றும் முறைகேடுகள் நடத்ததாகவும் கணக்காய்வாளர் சுட்டிக்காட்டியது சரி எனவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் டென்டர் குழுவின் தலைவர் ஆகியோர் கோப் குழுவுக்கு வந்து ஏற்றுக்கொண்டனர் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளார்.



