கசிந்த கரி ஆனந்தசங்கரியின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்..! கனடாவில் புதிய சர்ச்சை
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலொன்று கசிந்த விடயம் அந்நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக, தனிப்பட்ட நபர்கள் பாவிக்கும் துப்பாக்கிகளை மீளப் பெற கனேடிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்வங்களிலிருந்து கனேடிய மக்களை பாதுகாப்பதே இந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்.
புதிய திட்டம்
மக்களின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த திட்டம் அவசியமானது என கரி ஆனந்தசங்கரியும் கருத்து தெரிவித்திருந்தார்.
குறித்த தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில் துப்பாக்கிகளை திரும்ப வாங்குவதற்கு தேவையான வளங்கள் கனேடிய பொலிஸாரிடம் இல்லாமல் இருக்கலாம் என கரி ஆனந்தசங்கரி மற்றொரு நபரிடம் கூறுகின்றார்.
எனினும், இந்த புதிய திட்டம் பெரும்பாலும் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
செயற்றிறன் மிக்க நடவடிக்கைகள்
இந்த திட்டம் தொடர்பான விடயங்களை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தால் தான் அதனை வித்தியாசமாக கையாள்வேன் எனவும் அவர் கூறுகின்றார்.
இந்நிலையில், அமைச்சரின் தனிப்பட்ட உரையாடல் குறித்து எதிர்க்கட்சிகள் அவரை விமர்சித்து வருகின்றன.
இவ்வாறிருக்க, துப்பாக்கிச் சூடுகளை தடுப்பதற்கு உண்மையான மற்றும் செயற்றிறன் மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



