2029ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அர்ச்சுனா..!
2029ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கும் அளவுக்கு என்னை பிரபரமாக்குகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“எதிர்கால ஜனாதிபதி நளிந்த ஜயதிஸ்ஸவிற்கு இன்றிலிருந்து நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நான் உங்களிடம் பெரும் அன்பு கொண்டுள்ளேன். எந்நாளும் இல்லாதது போல் ஐஸ் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு
அந்த கொள்கலன் நாமல் எம்.பிக்கு சொந்தமானது என்கிறேன். ஆனால், இதுவரை அவரை கைது செய்யவில்லை. மேலும் நாமலின் தந்தை உட்பட அவர்களில் யாரையும் கைது செய்யவில்லை.
ஆனால் பாதசாரி கடவையின் ஓரத்தில் காரை நிறுத்தியதற்காக என்னை கைது செய்யப்போகிறார்கள். நாளை கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்படலாம்.
நான் காரை இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிறுத்தினேன், மேலும் எஞ்சினின் அதிக சூடு காரணமாக ஒரு நிமிடத்திற்கு நிறுத்தி கொள்கிறேன் இல்லாவிட்டால் தீப்பற்றி விடும் என்றேன்.
கிலோ கணக்கில் ஹெரோயின்
அதை ஊடகங்களில் வெளியிட்டதால், ஏன் அர்ச்சுனா எம்.பியை கைது செய்யவில்லை என கேட்கின்றனர். நான் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கேட்டேன். நான் பொலிஸ் நிலையத்திற்கு வரவா அல்லது நீங்கள் வந்து கைது செய்யப்போகிறீர்களா என்றேன்.
அது எங்களுக்கு தெரியாது, ரிபோட் போட்டே கைது செய்வோம் என்றார். கிலோ கணக்கில் ஹெரோயின் பிடிப்படுகிறது, ஆனால் கைது செய்வது என்னை போன்றவர்களை.
நான் பாய், தலையணை, செருப்பு எல்லாம் எடுத்து கொண்டு நாளை காலை நாடாளுமன்றம் வராமல் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல போகிறேன். அந்தளவுக்கு இந்த நாடு போயுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



