ஒரு வருடத்தில் நடந்த அதிசயங்கள்! நாமலின் கேள்விகளால் அதிர்ந்த நாடாளுமன்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வளமான நாட்டை உருவாக்கவே வந்தது. ஆனால் ஒரு வருடத்தில் பெரும் வளத்துடன் காணப்படுகிறார்கள் என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்ததார்.
பிரச்சினை
தொடர்ந்துரையாற்றிய அவர்,''நீங்கள் கூறிய 76 வருட சாபத்தில் எவ்வாறு கோடிஷ்வரரானீர்கள் என்ற பிரச்சினை உள்ளது அல்லது 76 வருட சாபத்தில் முடியாமல் போனதென்றால் கடந்த ஒரு வருடத்தில் எவ்வாறு கோடிஷ்வரரானீர்கள் என்று பெரும் பிரச்சினை உள்ளது.

ஆனால் அதற்கான காரண காரியங்களை சொல்லி உள்ளீர்கள்,அவை எவ்வளவுக்கு சாத்தியமானது என்பது எமக்கு தேவையில்லா காரணம். நீங்கள் உலகத்தையும் சமூகத்தையும் நோக்கும் பார்வையே பிரதிபிம்பமாக வெளிப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு இருக்கும் கவலை ஏமாற்றியது தான்.ஆனால் ஏமாற்றியதற்கான காரணங்களை பெருமையாக கூறுவதுதான் வெக்கி தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
வேலையற்றப் பட்டதாரிகள் பெலவத்தை அலுவலகத்திற்கு வேலை கேட்டு வந்தனர். நீங்கள் அடித்து விரட்டினீர்கள்,மேலும் கோவிட் காலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது அப்போது முகாமைத்துவ உதவியாளர்களே பாடசாலைகளில் கற்பித்தார்கள்.

ஜே.வி.பி ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மாணவர்களை பணயம் வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் முகாமைத்துவ உதவியாளர்களே கற்பித்தனர்.
நீங்கள் நோயாளர்களை கணக்கில் எடுக்காமல் தொழிற்சங்க போராட்டத்தில் அரசியல் செய்தீர்கள். மேலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் பரவாயில்லை உங்களின் அரசியல் கொள்கைகள் நிறைவேற வேண்டும் என செயற்பட்டவர்கள் இன்று தொழிற்சங்கங்களுக்கு உபதேசம் செய்கின்றனர்.
இந்த மனநிலை அன்றிருந்திருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும்.''என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam