ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
விஹாரமகா தேவி பூங்காவில் நேற்று(20) நடைபெற்ற தேசிய முன்பிள்ளை பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாளில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கைப்பேசி பயன்பாடு
கைப்பேசி பயன்பாடு இளம் பராயத்தினர் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
அத்துடன், ஆரம்ப வயதுகளில் திரை செயற்பாட்டை விட செயலில் கற்றல், சமூக தொடர்பு மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் சிறுவர்களின் திறமைகள் மற்றும் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.





மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri
