அழகுக்கலை நிலையத்தில் மயங்கி விழுந்த ஏழு பெண்கள்
கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் நேற்றையதினம்(20) ஏழு பெண்கள் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மின்சார தேவை
அதன்போது, குறித்த அழகுக்கலை நிலையம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் மின்சார தேவைக்காக மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வளிசீராக்கி இயக்கப்பட்டதால் காற்றோட்டம் இல்லாதமையினால் மின்பிறப்பாக்கியிருந்த வெளியான நச்சுப் புகை காரணமாக குறித்த பெண்கள் சுயநினைவை இழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தநிலையில் மயக்கமுற்ற பெண்கள் சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் அழகுக்கலை நிலைய ஊழியர்கள் எனவும் அங்கிருந்த ஏனைய மூவரும் வாடிக்கையாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri